திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், திருநங்கை ஒருவர் 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை திருமணம் செய்வது போல் நடித்து பண மோசடி செய்ததாக புகாரளித்துள்ளனர்.
திருநங்கை பபிதா ரோஸ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து,நாடக திருமணங்கள் செய்து இதுவரை 15க்கும் அதிகமான ஆண்களை ஏமாற்றியும்,இதில் வெவ்வேறு மாவட்டங்களில் நாடகமாடி 8 நபர்களை திருமணம் செய்தும் ஏமாற்றி உள்ளார். இதில் லட்சக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் நகை என மிக பெரிய மோசடியில் இவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈரோடு,திருச்சி,கடலூர், கள்ளக்குறிச்சி,கோவை, மடத்துக்குளம் திருப்பூர்,விருதுநகர், ராஜாப்பாளையம், நாகர்கோவில் போன்ற பல ஊர்களில் இருந்து பாதிக்கப்பட்ட ஆண்கள்,காவல் துறையில் பணியாற்றி வரும் நபர்கள்,நகை கடை உரிமையாளர்கள் என சுமார் 15க்கும் அதிகமான நபர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் பபிதா ரோஸை கைது செய்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவை அளித்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து நியூஸ்7 தமிழுக்கு பேய்ட்டியளித்தனர் இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததுள்ளது. திருநங்கை பபிதா ரோஸ் எப்போதும் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறி கொண்டு தனக்கு காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலர் அண்ணன்கள் என்று கூறி குடும்ப உறுப்பினர் போல் பழகி பணம் மற்றும் நகையை பறித்து விட்டதாக கூறினர்.
திருமணம் செய்து கொண்ட ஆண்களை பொறுத்தவரை அவர்களுடன் அன்புடன் பழகி முதலில் நாடகத் திருமணம் செய்வது போல் செய்து கொண்டு சில நாட்கள் உல்லாசமாக இருந்து விட்டு பின்னர் தான் எடுத்து வைத்து இருக்கும் புகைப்படத்தை வைத்து பிளாக்மெயில் செய்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று ஏமாற்றி உள்ளார். இதைப்போல் ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போது அங்கு உள்ள சிலரிடம் உடன் பிறந்த சகோதரி போல் பழகி பல பொய்களை கூறி இலட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு திருநங்கை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா கூறியதாவது: பபிதா ரோசால் ஒட்டுமொத்த திருநங்கைகள் சங்கத்திற்கும் இழுக்கு ஏற்படுவதாகவும், காவல்துறை உடனடியாக பபிதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.