முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

மதுரையில் தெற்கு தொகுதியில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டி!

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார். 

மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளும் அரசியல் அதிகாரங்கள் பெறத் துவங்கியுள்ளதோடு, தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திருநங்கை பாரதி கண்ணம்மா, மதுரையை மாதிரி நகரமாக மாற்றிக்காட்டுவேன் என வாக்குறுதி அளிக்கிறார். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதிய தலைமுறை மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் பாரதி கண்ணம்மா, நாட்டிலேயே  திருநங்கை ஒருவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல்முறை என்றும், அது தனக்கு பெருமையளிப்பதாகவும் கூறினார். 2014 மக்களவைத் தேர்தலின் போது மதுரை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார் பாரதி கண்ணம்மா. 2019ஆம் ஆண்டு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தபோது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.  

பாரதி கண்ணம்மா இளங்கலை பொருளாதாரம், முதுகலை சமூகவியல், கணினிப் பொறியியலில் டிப்ளமோ படிப்புகளோடு, சமூகவியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பையும் முடித்துள்ளார். தனக்கு மதுரை மக்கள் வாக்களிக்க வேண்டுமென தெரிவித்த அவர்,  “நான் திருநங்கை என்பதால் எனக்கு குடும்பம் எதுவும் கிடையாது என்பதால் நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.

தான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அனைவருக்கும் ஒரு நாளைக்கு 3 சாப்பாட்டுக்கு போதுமான ரேஷன் கிடைக்க வழிவகை செய்வேன் என வாக்குறுதி அளித்தார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்; குஜராத்தில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

G SaravanaKumar

இணையத்தை கலக்கி வரும் திருச்சிற்றம்பலம் பாடல்

EZHILARASAN D

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் கண்டனம்!

Halley Karthik