முக்கியச் செய்திகள் இந்தியா

உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீரைச் சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று தொடங்கி வைக்கிறார்.


உலக தண்ணீர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஜல்சக்தி அபியான், ஒரே பாரதம் உன்னத பாரதம் ஆகிய திட்டங்களின் கீழ் நீர் மேலாண்மை குறித்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இந்த நிகழ்ச்சியின்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கென் – பெட்வா புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று கையெழுத்தாக உள்ளது. கென் – பெட்வா திட்டத்தின் மூலம் நீர் பாசனம் அதிகமுள்ள இடங்களிலிருந்து நீர் தேவை அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு நீர் இணைப்பு வழித்தடங்கள் மூலமாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படும். இந்த திட்டம் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே கொண்டுவரப்படவுள்ளது. இதனால் 62 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும். அதேபோல் 10.62 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக தண்ணீர் தினத்தையொட்டி ‘மழை எங்குப் பெய்தாலும் எப்போது பெய்தாலும் மழை நீரைச் சேமிப்போம்” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு முடிவுகள்: மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் – அன்பில் மகேஷ்

Web Editor

தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்

Web Editor

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காலமானார்!

Gayathri Venkatesan