3 முதன்மைக்கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்தும், 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கியும் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் கல்வி அலுவலர்கள் அடிக்கடி நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வரும் சூழலில், 10 கல்வி அலுவலர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வி துணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு மாவட்ட CEO-ஆகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட CEO விஜயலட்சுமி அரியலூர் மாவட்ட CEO-ஆகவும், நெல்லை மாவட்ட CEO சுபாஷினி, நாகை மாவட்ட CEO-ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி, நெல்லை மாவட்டங்களுக்கு பதவி உயர்வின் மூலம் CEO இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக நிர்வாக அலுவலர், தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்கக துணை இயக்குநர், SCERT துணை இயக்குநர் ஆகிய CEO அந்தஸ்திலான பணியிடங்களும், DEO பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.







