கல்வி தொலைக்காட்சி CEO நியமனம் ரத்து?

கல்வி தொலைக்காட்சியின் CEO-ஆக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   சென்னையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க…

கல்வி தொலைக்காட்சியின் CEO-ஆக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலுக்குக் கல்வி தொலைக்காட்சி மிகப்பெரிய உதவியாக இருந்தது.

 

இதனால், தி.மு.க ஆட்சி அமைந்த பின்னரும் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளாக கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓ இல்லாமல் இயங்கிவந்த நிலையில், புதிதாக அந்த பதவி உருவாக்கப்பட்டு, மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதிக்கு மாதம் 1.5 லட்சம் ஊதியமும், இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு கல்வி தொலைக்காட்சிக்கு சி.இ.ஓ நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் மணிகண்ட பூபதி பணி நியமனத்தை முழுமையாக ரத்து செய்து விட்டதாகவும் மீண்டும் விண்ணப்பங்களை பெற்று தகுதி வாய்ந்த ஒருவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.