ஆர்.எஸ்.பாரதி தலைமையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான பயிற்சி முகாம்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக வாக்கு எண்ணிக்கை  மைய முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.  18வது மக்களவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைய உள்ளது.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற…

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக வாக்கு எண்ணிக்கை  மைய முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

18வது மக்களவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைய உள்ளது.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்லுக்கான முதற்கட்ட வாக்குபதிவு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி, இறுதி கட்டமான 7ம் கட்ட வாக்குபதிவுடன் இன்றுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே  வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் அறைக்குள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில்,  திமுக தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,   திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான பயிற்சி முகாம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது.  இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்,  வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி வகுப்பை திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.