அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு: பள்ளிக் கல்வித் துறை

1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு  நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்து…

1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு  நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்து வரும் 18ஆம் தேதி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளைப் பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.