பாம்பு கடித்து பலியான பெண் குழந்தை: குடிபோதையில் விரட்டிய தந்தை கைது

கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அருகே 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலியான விவகாரத்தில், குடிபோதையில் அந்த குழந்தையை விரட்டிய தந்தை கைது செய்யப்பட்டார். வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என அந்தக் குழந்தையின்…

கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அருகே 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலியான விவகாரத்தில், குடிபோதையில் அந்த குழந்தையை விரட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.

வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என அந்தக் குழந்தையின் தாயிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை சேர்ந்தவர் சுரேந்தின். கூலித் தொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும், சுஷ்விகா மோள் (4வயது) சுஷ்வின்சிஜோ (12வயது), சுஜிலின் ஜோ (9வயது) ஆகியோர் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு நடந்த நிலையில், குடி போதையில் அவ்வப்போது வரும் சுரேந்திரன் மனைவி குழந்தைகளை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் மனைவி குழந்தைகளை அடிக்க முயன்றார். இதை பார்த்து பயந்து அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்குள் குழந்தைகள் சுஷ்விகா மோள் , சுஷ்வின்சுஜோ, சுஜிலின் ஜோ ஆகியோர் நள்ளிரவு அருகில் உள்ள ஓடினர். அப்போது எதிர்பாராதவிதமாக 4வயது குழந்தையான சுஷ்விஷா மோளை விஷபாம்பு கடித்தது. இதை குழந்தை அழுதுகொண்டே கூறியதையடுத்து, அக்கம்பக்கத்தினர் குழந்தை சுஷ்விகா மோளை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் அழும் காட்சிகளும் வெளியான நிலையில் சுரேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
அந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்றும் தகராறு ஏற்பட காரணம் குறித்தும் சிஜி மோளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வீடியோ ஏற்கனவே தகராறு நடந்தபோது பதிவு செய்தது என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.