இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதால், ரயில்வே சிக்னல்கள் உள்ளிட்டவை உருகும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இங்கிலாந்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து கடுமையாக வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. பள்ளிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. லண்டன் தீயணைப்புப் பிரிவினர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதற்காக தீயணைப்பு இயந்திரங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏராளமான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில், ஒரு குடிசை வீடு எரிகிறது. பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள காடு தீப்பிடித்து எரிந்துள்ளது. திரையரங்கு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், அவசரகால அலாரம் அங்கு வேலை செய்யவில்லை. புவி வெப்பமடைதல்தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்று ஜார்ஜ் ஃபோராக்ரேஸ் தியேட்டரில் ஏற்பட்ட விபத்தின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
🔥 The East Coast Mainline has re-opened following a fire that spread to the track in Sandy, Bedfordshire – due to the extreme heat. 🌡️
⚠️ Disruption is still to be expected throughout the day, so check before you travel – @nationalrailenq.
➡️ https://t.co/4wBwJJ7g6T pic.twitter.com/qQ1fj0f0NG
— Network Rail (@networkrail) July 20, 2022
கடும் வெப்ப அலை காரணமாக பெட்ஃபோர்ட்ஷையரின் சாண்டி நகரத்தில் ரயில்வே சிக்னலில் தீப்பற்றி உருகியுள்ளது. ஈஸ்ட் கோஸ்ட் மெயின் லைனில் உள்ள சிக்னலின் படத்தை நெட்வொர்க் ரயில் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரயில் நிலையங்களில் உள்ள மேல்நிலைக் கம்பிகள், ரயில் தடங்கள், சிக்னல்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதால் இங்கிலாந்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மீண்டும் ரயில்கள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நெட்வொர்க் ரயில் பயணிகளுக்கு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் பயணிகள் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பு ரயில் விவரம் குறித்த அறிவிப்புகளை சரிபார்த்து பயணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா