“தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்’ என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும்

நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், ‘பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்’ என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்.

அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம்.

தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.