வெளியானது துல்கர் சல்மானின் #LuckyBaskhar டிரெய்லர்!

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.அவரது நடிப்பில் வௌியான ‘சீதா…

trailer, Dulquer Salmaan ,Lucky Bhaskar,release,film team

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.அவரது நடிப்பில் வௌியான ‘சீதா ராமம்’ திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் ‘லக்கி பாஸ்கர்’.

வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : India – #China இடையே உடன்பாடு | கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து!

‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் சிறந்த கவனம் பெற்றது. அண்மையில், ‘கொல்லாதே’ பாடல் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.