தொடரும் சோகம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியர்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை…

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியர்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், ராஜவேலு என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேலும் பலர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 5 பேர் உயிரிழந்திருந்த நிலையில், ஜம்பு, சங்கர், முத்து ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள் : கர்நாடக முதலமைச்சர் யார்?? – இன்று முடிவு வெளியாக வாய்ப்பு…!

இதனிடையே, திண்டிவனத்தில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி மருவூர் ராஜா மீது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது. கைதான மருவூர் ராஜா, 20வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.