முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்.பி கணேசமூர்த்தியின் கோரிக்கை ஏற்பு

ரயில்வே சுரங்கப்பாதையை புதுப்பித்து தர கோரி ரயில்வே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை வெற்றியடைந்திருப்பதாக மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி , மறுமலர்ச்சி தி.மு.கழக பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து, கீழ்காணும் கோரிக்கை விண்ணப்பத்தினை அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில், மாநில நெடுஞ்சாலை எண் 83 ஏ, ஈரோடு-தாராபுரம் சாலையுடன், கரூர் சாலையும் இணைந்து, ஈரோடு நகருக்குள் நுழையும் இடத்தில், 1932 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை எண் 352, உயரம் குறைவாக இருக்கின்றது. அந்தக் காலத்தின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்றவாறு, 3.5 மீட்டர் உயரமும் 6 மீட்டர் அகலமும் கொண்டதாகக் கட்டப்பட்டது.

ஆனால், தற்போது இலட்சக்கணக்கான மக்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர். கனரக ஊர்திகளின் போக்குவரத்து பெருகி விட்டது. ஆனால், உயரம் குறைவாக இருப்பதால், கனரக ஊர்திகள், இந்த வழியாகச் செல்ல முடியவில்லை; திரும்பிச் செல்ல நேரிடுகின்றது; அதனால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது.

எனவே, இந்தப் பாலத்தை உடனடியாகப் புதுப்பித்துக் கட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் ஆகியோருடன், மாநில நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் இணைந்து செயல்பட்டு, இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மேற்கண்ட ரயில்வே அதிகாரிகள் தகுந்த ஒத்துழைப்பு நல்கிடவும், ரயில்வேத்துறையின் சார்பில் உரிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கிடவும் தாங்கள் ஆவன செய்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.” என தனது கோரிக்கை கடிதத்தில் தெரிவித்திருந்ததாகவும்? இந்தக் கோரிக்கை ரயில்வே அமைச்சர் உடனே ஏற்றுக்கொண்டு, மேற்கண்ட ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய ஆணைகளைப் பிறப்பித்துள்ளார் என்றும் தனது அறிக்கையில், கணேசமூர்த்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது: திருமாவளவன்

Halley Karthik

அதிமுக விளம்பர பலகைகளில் ஓபிஎஸ் பெயர், புகைப்படம் அழிப்பு!

G SaravanaKumar

“நான் காங்கிரசில் சேருகிறேனா?”- சந்திரசேகர ராவ் மகள் கவிதா விளக்கம்

Web Editor