பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மனைவியின் காதலனை கொடூரமாக போட்டுத்தள்ளிய கணவன்!

மனைவியின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொடூரமாக கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த இளைஞர் அவர். கடந்த மே மாதம் அவருக்கு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாகச்…

மனைவியின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொடூரமாக கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த இளைஞர் அவர். கடந்த மே மாதம் அவருக்கு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த அவர் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது செல்போன் வடிவில். மனைவி, யாருடனோ மகிழ்ச்சியாக அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். முதலில் கண்டுகொள்ளவில்லை அவர். நாட்கள் செல்ல செல்ல, இரவு நேரங்களில் அதிகமாக அவர் போனில் பேசி கொண்டிருப்பதைக் கண்டதும் சந்தேகம் எழுந்தது. ஆனால், இதுபற்றி அவரிடம் ஏதும் சொல்லவில்லை.

ஒரு நாள் இன்னொரு இளைஞருடன் அவர் நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் காதலன். பிறகு மனைவியை கண்டித்தார். அதோடு பிரச்னை முடிந்துவிட்டது. ஆனால், உறவினர்களும் ஊர்க்காரர்களும் கணவனை கிண்டல் செய்யத் தொடங்கினர். இதனால் வெறுப்பான அவர், தனது தந்தையின் உதவியை நாடினார். மனைவியின் காதலனான மோகித் என்பவரை கொல்ல முடிவு செய்தார்.

அதன்படி, ’கொஞ்சம் பேசணும்’ என்று கோலாபூர் சாலை அருகே அழைத்தனர். வந்தார் மோகித். அப்போது அவர் கழுத்தை வெட்டிய அவர்கள், உடலை பைக்கில் கட்டி இழுத்துச் சென்று அருகில் இருந்த மரத்தில் பைக் விபத்தில் அவர் இறந்தது போல, போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

உடலைக் கைப்பற்றிய போலீசாரின் அடுத்தடுத்த விசாரணையில், இந்த கொலை விவகாரம் தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.