தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் தீபாவளி தொடர் விடுமுறையால் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா என பல சுற்றுலா தளங்களில் கடந்த 2 நாட்களாக காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இங்கு உள்ள பூக்களையும், பச்சை பசேல் இயற்கையையும் ரசித்தும், மிகப்பெரிய புல்வெளி மைதானத்தில் ஓய்வு எடுத்தும், செல்ஃபி எடுத்தும் விடுமுறையை கொண்டாடினர். தற்போது உதகையில் காலநிலை குளுகுளு என இருப்பதால் சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.







