வார விடுமுறையை ஒட்டி உதகையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
உதகையின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான பைக்காரா படகு இல்லத்தில், இதமான காலநிலையில் படகு சவாரி செய்து விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இயற்கை எழில் மிகுந்த சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தற்போது பகல்
நேரங்களில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அதேப்போல் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர் காலநிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை காணப்படுகிறது.
அவ்வாறு உதகை வரும் சுற்றுலா பயணிகள் உதகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த
சுற்றுலா தலங்களில் ஒன்றான, உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் அடர்ந்த
வனப் பகுதியின் நடுவே, இயற்கை சூழலில் முக்குருத்தி தேசிய பூங்கா அடிவாரத்தில்
அமைந்துள்ள பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே போல் வார விடுமுறையையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் உதகை பைக்காரா படகு இல்லத்தில், தங்களது
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இயந்திர படகு மற்றும் அதிவேக படகுகளில்
இதமான காலநிலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் உதகை பைக்காரா படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புது
அனுபவத்தை அளிக்கும் வகையில், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிகளின் நடுவே
இதமான காலநிலையுடன் அதிவேக படகுகளில் சவாரி செய்து, சுற்றுலா பயணிகள்
மகிழ்ந்தனர்.







