இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுமுறை என்பதால்,
ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்துள்ளனர்.
இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுமுறை என்பதால், ஏராளமான
சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்துள்ளனர். இன்று அதிகாலை முதலே
சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வர தொடங்கினர். பரிசல் பயணத்திற்கு
நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர். தர்மபுரி, சேலம்,
கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட மக்களும், கர்நாடக மாநிலம் பெங்களூரில்
இருந்து அதிகப்படியான சுற்றுலா பயணிகளும் ஒகேனக்கலுக்கு வந்துள்ளனர்.
ஒகேனக்கலில் தற்போது வினாடிக்கு ஐயாயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ள
நிலையில், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்தும் பரிசல் பயணம்
மேற்கொண்டும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால்,
சுற்றுலாவை நம்பியுள்ள கடைக்காரர்கள், மசாஜ் தொழிலாளர்கள், சமையலற்கள்,
மீனவர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கு. பாலமுருகன்







