77-வது சுதந்திர தினத்தையொட்டி பாலிவுட் திரைப்பிரபலன்களான ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட், தீபிகா படுகோண் உட்பட பலர் தங்களது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளது தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற விழாவில், 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல் தமிழ்நாட்டிலும் சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இது தவிர பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்து வரும் நிலையில், பல முக்கிய தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், பாலிவுட் நடிகர், நடிகைகளான ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட், தீபிகா படுகோண் உட்பட பல்வேறு ஹிந்தி திரையுலக பிரபலங்கள் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சாரே ஜஹான் சே அச்சா’ பின்னணியில் இசைக்கும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டு தனது ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நடிகை கரீனா கபூர், சுதந்திர தின வாழ்த்துக்ளுடன் கூடிய இதய வடிவிலான ஈமோஜியை பகிர்ந்து இந்திய மூவர்ணக் கொடியின் படத்தை வெளியிட்டு 77வது சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
நடிகை அனுஷ்கா ஷர்மா, வந்தே மாதரத்தின் மெல்லிசைப் பாடலைப் பதிவுசெய்து, தனது பக்கத்தை பின் தொடர்பவர்களுக்கு சுதந்திர தின
வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நடிகை கியாரா அத்வானி BSF என சொல்லப்படக்கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் தான் இருந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டு சுதந்திர தின வாழ்த்துகளை கூறியதோடு, “எனது சக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் அனைத்து துணிச்சலான இதயங்களையும் நினைவுகூரும் இந்த நாளில் எங்கள் இதயங்கள் பெருமிதம் கொள்கின்றன, அவர்களை நான் என்றென்றும் போற்றுவேன், ”என அந்த வீடியோ பதிவிற்கு கீழே குறிப்பிட்டிருந்தார்.
मैं तिरंगा हूँ…… 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
मैं प्रायः सोचता हूँ कि अगर कभी हमारे तिरंगे को देशवासियों से अपनी भावनाओं को व्यक्त करने का मौक़ा मिले तो तिरंगा हमसे क्या कहेगा? स्वतंत्रता दिवस के शुभ अवसर पर मैंने अपने इस वीडियो में हमारे राष्ट्रीय ध्वज की तरफ़ से देशवासियों को संबोधित करने का… pic.twitter.com/y5HyWMnwuE— Anupam Kher (@AnupamPKher) August 15, 2023
நடிகர் அனுபம் கெர் இந்திய தேசியக் கொடியைக் கொண்ட வீடியோவை வெளியிட்டு , மூவர்ணக் கொடியின் வரலாற்றை விவரித்திருந்தார். நடிகை மலாய்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய மூவர்ணக் கொடியின் படத்தைப் பகிர்ந்து “77வது” என்ற வாசகத்துடன் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இவர்கள் தவிர ஏற்கனவே நடிகர் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் ஆகியோர் 77வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபைட்டர்’ பட போஸ்டரை தங்களது சமூகவலைதள பாக்கத்தில் வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
- பி.ஜேம்ஸ் லிசா