குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் கொட்டும் தண்ணீரில் மர கிளைகள், மரக்கட்டைகள், கற்கள் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…

குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் கொட்டும் தண்ணீரில் மர கிளைகள், மரக்கட்டைகள், கற்கள் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது. ஆண்டு முழுவதும் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே சீசன் காலமாகும்.

இந்த சீசன் காலங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவதற்கும் அருவிகளில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜூன் முதலில் இருந்தே தென்மேற்கு பருவமழை தொடங்காததால் அருவிகளில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் இருந்தது. தற்போது இரண்டு தினங்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து இருந்தது. மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அருவிகளில் இருந்து கொட்டும் தண்ணீரில் மரக்கிளைகள், மரக்கட்டைகள், கற்கள் உள்ளிட்டவைகள் தண்ணீருடன் அடித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போலீசார்  அருவிகளில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.