பழனி அருகே, கொடைக்கானல் செல்லும் சாலையில் 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வேனில் 20-க்கும் மேறப்பட்டோர் சென்றுள்ளனர். பின்னா் கொடைக்கானல் சுற்றுலாவை முடித்து விட்டு பழனி கோயிலுக்கு சென்றபோது ஏழாவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த பழனி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகளான 22பேரை கயிறு கட்டி மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் 3 குழந்தைகள் உட்பட படுகாயமடைந்த 22பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ரூபி.








