ஏற்கனவே திறக்கப்பட்ட திட்டத்தை, மீண்டும் திறக்க எம்எல்ஏ வருவதாக திடீர் பரபரப்பு!

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி பொம்மன்பட்டியில் கடந்த 8 தேதி அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்த ஜல் ஜீவன் திட்டத்தை, பவானி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே சி…

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி பொம்மன்பட்டியில் கடந்த 8 தேதி அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்த ஜல் ஜீவன் திட்டத்தை, பவானி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே சி கருப்பண்ணன் மீண்டும் திறக்க வருவதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பொம்மன்பட்டில் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்தை கடந்த 8 ஆம் தேதி அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

இந்த பணிகள் குறித்து அதிமுக பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி கருப்பணன்
பொம்மன்பட்டியில் பாதி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் இல்லை என கிராம
மக்கள் கூறியதைத் தொடர்ந்து, அதை பார்ப்பதற்காக பொம்மன்பட்டி வருவதாக
கூறினார். இதனை, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, குடிநீர் குழாய் திறக்க வருவதாக கூறியவுடன், ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பணன், தான் ஆய்விற்காக வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பார்வையிட்ட பகுதிகளில் டிஎஸ்பி பவித்ரா தலைமையில் பத்துக்கு மேற்பட்ட கவுந்தப்பாடி போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்நிகழ்வால் பொம்மன்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

-ம.ஶ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.