ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை!

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 5,000 கன அடியாக…

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 22,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவு், அருவியில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.