கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோரா வைரஸ்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் விழிஞ்சம் பகுதியில் அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. டையேரியா எனப்படும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ரோட்டோ வைரஸை ஒத்த பண்புகளை…

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் விழிஞ்சம் பகுதியில் அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டையேரியா எனப்படும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ரோட்டோ வைரஸை ஒத்த பண்புகளை நோரா வைரஸ் கொண்டுள்ளது. இதுபற்றி கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிக்கை ஒன்றை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த நோய் அதிக தொற்றும் தன்மை கொண்டது என்பதால் மக்கள் அனைவரும் நல்ல சுகாதார முறையை கடைப்பிடிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொல்லம் மாவட்டத்தின் கொட்டரக்கராவில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் படித்து வரும் மாணவர்களில் 12 பேர் உணவு நஞ்சானதில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் நோரா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் இதனால் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் மக்கள் எச்சரிக்கையுடனும், சுகாதாரத்துடனும் இருக்க வேண்டும் என வீணா ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.