11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாஸ் காட்டிய டாப் 5 மாவட்டங்கள்..!!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம்…

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியானது. முன்னதாக 10-ம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியானது. அதை தொடர்ந்து தற்போது பிளஸ்-1 முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in & www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 94.36% மாணவிகள், 86.99% மாணவர்கள், 88.98% மாற்றுத்திறனாளிகள், 86.40% சிறைவாசிகள் என மொத்தம் 90.93 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி டாப் 5 இடம் பிடித்த மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு :

1. திருப்பூர் – 96.38%

2. ஈரோடு – 96.18%

3. கோயம்புத்தூர் – 95.73%

4. நாமக்கல் – 95.60%

5. தூத்துக்குடி – 95.43%

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.