பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடலுக்கு இயக்குநர்
பாரதிராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து
வந்தவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு (70). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்திருந்த நிலையில் நேற்று காலை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
தேனியில் உள்ள இவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவால் கிழக்கு சீமை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டவர். பின் பருத்திவீரன், மைனா, கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்..
செவ்வாழை ராசுவை திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் பாரதிராஜா
செவ்வாழை ராசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.







