சாலைமறியலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர்கள்: பலவந்தமாக கைது செய்த போலீசார்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கே தெரியாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆன்லைன் மூலமாக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி நான்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கே தெரியாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆன்லைன் மூலமாக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி நான்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன.இவற்றுக்கு தேவையான பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றி கொள்வதற்காக மத்திய அரசால் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் 16 ஊராட்சிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட நிதியினை நேரடியாக வழங்காமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
மூலமாக ஆன்லைன் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சிக்கு தெரியாமல் நடைபெறு திட்டப்பணிகளை நிறுத்தக்கோரி புத்தூர் கடை தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நேதாஜி,காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த வடிவேல்,உமையாள்பதி
ஊராட்சி மன்ற தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிள்ளிவளவன்,முதலைமேடு ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை கைது செய்த முயற்சித்தப்போது வாகனத்தில் ஏற மறுத்த ஊராட்சி மன்ற தலைவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.மேலும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவரது ஆதரவாளர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.