குடியரசு தின அலங்கார ஊர்தி: மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தியை பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்புக்காக,…

மதுரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தியை பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்புக்காக, தமிழ்நாடு சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் பங்கேற்று, பின் மாநிலம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மைச் செய்தி: குடியரசுத் தலைவரின் உரையுடன் நாளை தொடங்குகிறது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

இதனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து அலங்கார ஊர்தியில் அமைக்கப்பட்டுள்ள விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.