தக்காளி விலை 40-ஆவது நாளாக தொடர்ந்து உயர்வு! ரூ.180-க்கு விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி!!

தக்காளி விலை 40-ஆவது நாளாக தொடர்ந்து உயர்ந்து ஒரு கிலோ நாட்டுத் தக்காளி சில்லரை விலை கடைகளில் ரூ.180 வரை விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால்…

தக்காளி விலை 40-ஆவது நாளாக தொடர்ந்து உயர்ந்து ஒரு கிலோ நாட்டுத் தக்காளி சில்லரை விலை கடைகளில் ரூ.180 வரை விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறைந்தபாடில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி  160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை கடைகளில் 180 வரை விற்பனை செய்யப்படுகிறது.  தக்காளி விலை தொடர்ந்து 40வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நவீன் தக்களி எனப்படும் பெங்களூர் தக்காளி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 170 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சில்லரை விற்பனை கடைகளில் 200 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் சின்னவெங்காயம் கிலோ 80 ரூபாய் முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு முக்கிய தேவையாக தக்காளி, மற்றும் வெங்காயம் உள்ளது. இதனால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.