அமெரிக்க அதிபர் தோதலில் குடியரசு கட்சியின் வேட்பாளா் தேர்வுக்குப் க இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹா்ஷ் வா்தன் சிங் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹா்ஷ் வா்தன் சிங்(38) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.







