டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சியை சேர்ந்த மூவர் தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்காக இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த ஒரு மாதமாக பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்டத்தை…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்காக இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த ஒரு மாதமாக பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி சேகர் மற்றும் சுபா வெங்கடேசன் மற்றும் லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் என்பவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கின்றனர்.

மேலும், ரேவதி வீரமணி, நாகநாதன் பாண்டி ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவது இதுவே முதன்முறையாகும்.

https://twitter.com/Anbil_Mahesh/status/1412358916059533316

இது குறித்து பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் சார்பாக தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர்களுக்கு வாழ்த்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.