முக்கியச் செய்திகள் இந்தியா

பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்

மூச்சுத்திணறல் காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1944 முதல் தேவதாஸ், மதுமதி, கங்கா ஜமுனா உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கிய திலீப் குமார் 1998ல் குயிலா திரைப்படத்துடன் தனது நடிப்பை நிறுத்திக்கொண்டார். இதற்கிடையில், 1994ல் தாதாசாகேப் பால்கே விருதை பெற்றார். 1950-60களில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தார். 2015ல் பத்மவிபூஷன் விருதையும் திலீப் பெற்றார்.

தற்போது சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவுக்கு ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

Halley Karthik

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Jeba Arul Robinson

7வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்

Halley Karthik