இந்திய தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் அஸ்ஸாமில் மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு சர்வதேச தடகள போட்டியில் இந்தியா சார்பில் ஜூனியர்களுக்கான 400 மீட்டர் பிரிவில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஹிமா தாஸிற்கு (21) அஸ்ஸாமில் மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளராக பதவி வழங்கி அம்மாநில அரசு கவுரவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால்ஹிமா, அதுகுறித்த நியமன கடிதத்தை ஹிமா தாஸிற்கு நேற்று வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஹிமா தாஸிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், காவல்துறையில் முக்கிய பதவியில் விளையாட்டு வீராங்கணை ஒருவர் நியமிக்கப்படுவது, இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறை மீதுள்ள ஆர்வத்தை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹிமா தாஸ் செரிவிக்கையில், தனது சிறு வயதில் முதலே காவல்துறையில் சேர வேண்டும் எனக் கனவு கண்டதாக கூறினார். அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பதவி, புகழ் அனைத்தும் விளையாட்டு போட்டிகள் மூலம் கிடத்ததாக மகிழ்ச்சி தெரிவித்த அவர், 2021ஆம் ஆண்டிற்கான டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஹிமா தாஸ் பங்கேற்க ஆயத்தமாகி வருவதாகவும் கூறினார்.