ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

’பதக்கத்தை நாட்டிற்கு  சமர்ப்பிக்கிறேன்’: மீராபாய் சானு

’எனது பதக்கத்தை நாட்டிற்காக  சமர்ப்பிக்கிறேன்’ என்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.

மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். தொடர்ந்து 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தபோது, அவரால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் 115 கிலோ எடையை அவர் தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பதக்கம் வென்ற மீராபாய் சானு கூறுகையில்,’நான் தங்கப் பதக்கத்தைத்தான் வெல்ல நினைத்தேன். ஆனால் என்னால் வெல்ல முடியவில்லை.

நான் தங்கம் வெல்ல கடுமையாக முயற்சித்தேன். நான் இரண்டவாது முறை எடையை தூக்கும்போது எனக்கு தெரிந்தது என்னால் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்று. இந்தியாவுக்காக பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஓட்டுமொத்த நாடும் என்னை பார்த்துகொண்டிருந்தது. அவர்கள் என்மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். நான் சிறிது பதற்றமாக இருந்தேன் ஆனால் வென்றே தீரவேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தேன். நான் இதற்காக கடினமாக உழைத்திருக்கிறேன்.எனது பதக்கத்தை நாட்டிற்காக  சமர்ப்பிக்கிறேன். ‘ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சந்திரமுகி 2 படப்பிடிப்பு தொடங்கியது

G SaravanaKumar

“அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்

G SaravanaKumar

கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா: ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு

Halley Karthik