மதுரையில் என்ஐஏ திடீர் சோதனை

மதுரையில் தெப்பக்குளம் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை தெப்பக்குளம் தமிழன் தெரு பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர், சமூகவலைத்தளங்களில் பொது அமைதிக்கு எதிராகவும், மத…

மதுரையில் தெப்பக்குளம் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை தெப்பக்குளம் தமிழன் தெரு பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர், சமூகவலைத்தளங்களில் பொது அமைதிக்கு எதிராகவும், மத மோதல்களை உருவாக்கும் வகையில் தகவல்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், காவல்துறையினரால் கடந்த ஏப்ரல் மாதம் அப்துல்லா கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள அப்துல்லாவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இஸ்மாயில்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.