ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்; பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் மொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்று மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஒலிம்பிக் ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இஸ்ரேல் வீராங்கனை பொலிகர்போவாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிவி சிந்து முதல் செட்டை 21 – 7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21 – 10 என்ற கணக்கிலும் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement:
SHARE

Related posts

மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

Ezhilarasan

புதிதாக 3 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள்

Saravana Kumar

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி

Saravana Kumar