கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்

மாமல்லபுரம் அருகே கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு…

மாமல்லபுரம் அருகே கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சாலையில் காரில் பயணித்துள்ளார். அப்போது, ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அவர் பயணித்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது ஆண் நண்பர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்த வள்ளிச்செட்டி பவாணி யாஷிகா ஆனந்தின் நண்பர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.