முக்கியச் செய்திகள் விளையாட்டு

இன்று தொடங்குகிறது இந்தியா – இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி

இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. 

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசி போட்டியில் 5 புதுமுக வீரர்களை களமிறக்கியது. அதனால், பீல்டிங்க் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்விளைவாக இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்றிரவு நடக்க உள்ளது. இதில், இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி நம்பிக்கையுடன் களமிறங்கும். இந்திய அணியும் தனது முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும்.

இதுவரை இரு அணிகளும் 20 ஓவர்கள் போட்டியில் நேருக்கு நேர் 19 போட்டியில் மோதியுள்ளன. அதில் இந்தியா 13 போட்டியிலும், இலங்கை 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒருபோட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை

Advertisement:
SHARE

Related posts

பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்கு..

Saravana Kumar

ஸ்டேன் சாமி அஸ்தியை தோளில் சுமந்து திமுக எம்.பி. அஞ்சலி

Gayathri Venkatesan

அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??

Saravana Kumar