நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என நம்புவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில் நேற்று சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இன்று சந்தித்து திமுக பெற்று வரும் அனைத்து வெற்றிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்ககளை சந்தித்து பேசிய அவர், ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்து வருவதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன்.
திமுக அனைத்திலும் வெற்றி பெறவும், தமிழ்நாட்டு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துகள். நாங்கள் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என நம்புகிறோம். அமைதி, நல்லிணக்கம் உள்ள இந்தியாவாக அது இருக்கும் என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா