முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,303 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,303 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 26,79,568 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 15,992 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,39,836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,86,03,749 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதேபோல இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 744 பேர் ஆண்கள் மற்றும் 559 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,428 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 26,27,780 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 13 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 35,796 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 168 பேரும், கோவையில் 128 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

2K கிட்ஸின் மொழி எமோஜி: உலக எமோஜி தினம்

குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய சித்தி !

Vandhana

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Halley karthi