ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையை ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும். இதை பெற பயனர்கள் ரூ.249க்கு மேலான ரீசார்ஜ்களை 36 மாதங்களுக்கு செய்ய வேண்டும். சாம்சங், ஓப்போ, ரியல்மீ, மோட்ரோலா, சியோமி, லாவா போன்ற மொபைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை பெற முடியும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏர்டெல் வழங்கும் 6000 கேஷ் பேக் ஆனது இரு தவணைகளாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். 6 ஆயிரம் ரூபாயில் 18 மாதங்கள் முடிந்த பின்னர் 2,000 ஆயிரம் ரூபாயும், 36 மாதங்கள் முடிந்த பிறகு மீதமுள்ள 4,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் 6,000 கேஷ்பேக் கிடைப்பது மட்டுமின்றி மொபைல் ஸ்கிரினில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை 1 முறை மாற்றிக்கொள்ளவும் முடியும் என ஏர்டெல் நிறுவனம் தெறிவித்துள்ளது.