விவாகரத்து அறிவிப்புக்கு பின் முதன்முறையாக டிவி நிகழ்ச்சியில் தோன்றும் சமந்தா

நடிகை சமந்தா பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும் 14ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.   நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து…

நடிகை சமந்தா பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும் 14ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.  

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக, கடந்த 2ம் தேதி சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நாக சைதன்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், இத்தகவலை வெளியிட்டிருந்தார். இதையடுத்து இவர்களின் விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத்தொடங்கியது.

இதையடுத்து,  நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கான காரணம் என பல வதந்திகள் வந்து கொண்டுள்ளன. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் எனக்கு குழந்தை வேண்டாம் என நான் சொன்னது போன்றும், மேலும் குழந்தையை கலைத்து விட்டதாகவும் பல வதந்திகள் வந்தது. இதெல்லாம் தவறானவை. என்னுடைய விவாகரத்து மிகவும் வலியானது; அதிலிருந்து வெளியேற எனக்கு இன்னும் அவகாசம் தேவை; விவாகரத்து குறித்து இடைவிடாமல் வரும் வதந்திகள் என்னை காயப்படுத்தியது, ஆனால் ஒருபோதும் சோர்ந்து போக செய்யாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமந்தா பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வரும் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கி வருகிறார்.  வெளியான ப்ரோமோவில், ஜூனியர் என்டிஆர் சமந்தாவை வரவேற்கிறார். பின்னர் இருவரும் பேசத்தொடங்குகிறார்கள். அப்போது, சமந்தா தான் பதட்டமாக இருப்பதாக கூறுகிறார். உடனே ஜூனியர் என்டிஆர் நீங்கள் ‘ஹாட் சீட்டில்’ அமர்ந்திருப்பதால் அப்படி ஒரு உணர்வு ஏற்படுவதை நான் எதிர்பார்த்தேன் என தெரிவிக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Gemini TV (@geminitv)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.