தமிழகத்தில் நேற்றைவிட இன்று கொரோனா உயிரிழப்பு ஓரளவு குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,13,502 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,08,855 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவுக்கு 77 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,728 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 14,043 மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,90,919 ஆக அதிகரித்துள்ளது.