தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. விசில் சின்னத்தில் போட்டியிட்டுள்ள தவெக தன் முதல் தேர்தலிலேயே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்டுள்ள திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில் தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;
60 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று. விஜய் மீது கடுமையான அவதூறுகள் பரப்பப்பட்டன. திமுக அரசே எதிர்த்து நின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, 32,808 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்படத்தகுந்தது.







