தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-ம் சவரனுக்கு ரூ.2,160-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750-க்கும் ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனையானது.
இதனிடையே தங்கம் விலை இன்று காலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது. இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




