தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதிய மைல்கற்களை எட்டி, இந்த பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள நடிகர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!!!
இன்றைய முடிவு, மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது… இந்த வெற்றி தமிழகத்தின் அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







