ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே இருந்து, மழை பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கல்வி நிறுவனங்கள், சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.







