ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் இலங்கை வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை விளையாடும் வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் இன்று கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் களம் காண்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் (இலங்கைக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் –
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திரஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்: பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.
இதனிடையே போட்டி நடைபெறும் நகரில் இன்று 80 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




