2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கால அவகாசம் செப்டமபர் மாதம் 30ஆம் தேதிக்குள் முடிவடையும் நிலையில், இதுவரை 93 சதவீத 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெற்றப்படுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், அனைத்து வங்கி கிளைகளில் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மேலும், கணக்கு வைத்திருக்காத ஒருவர் கூட அடையாளச் சான்று இல்லாமல் எந்த வங்கிக் கிளையிலும் ₹2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இருப்பினும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரம்பு உள்ளது. ஒரு நபர் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம். .
இதனைத்தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்கள் வங்கி செலுத்தியும் மாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76 சதவீத வைப்புத் தொகையாகவும்,13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.




