முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 15 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 ஆயிரத்து 998 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் விடுபட்ட இறப்பு எண்ணிக்கையையும் சேர்ந்ததால், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று அதிகமாகியுள்ளது.

இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 480ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 36 ஆயிரத்து 977 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 34 லட்சத்து 25 ஆயிரத்து 446 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

உலகிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளி விண்வெளி வீரரை பணியமர்த்தும் இஎஸ்ஏ

Vandhana

சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

Ezhilarasan

ஹோலி கொண்டாட்டம்: சன்னி லியோனின் வைரல் புகைப்படங்கள்

Jeba Arul Robinson