முக்கியச் செய்திகள் தமிழகம்

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித்தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் வாட்ஸ்ஆப்பில் தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி, வினாத்தாளை பதிவிட்டு விடைகளை எழுதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தேர்வை நடத்த வேண்டும் என்றும், வினாத்தாளை முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

அரசியலில் தற்போது பக்குவமாக செயல்பட்டு வருகிறேன்: ராஜேந்திர பாலாஜி

Ezhilarasan

உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது: ஆர்.பி.உதயகுமார்!

Jayapriya

அரசு இல்லத்திலிருந்து மாற விருப்பமில்லை:எடப்பாடி பழனிசாமி!